Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி63 ஷூட்டிங் ஸ்பாட்டில் மறுபடியும் விஜய் பார்க்க சென்ற ரசிகர்கள்:

தளபதி63 ஷூட்டிங் ஸ்பாட்டில் மறுபடியும் விஜய் பார்க்க சென்ற ரசிகர்கள்:

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி63 பட வேலைகள் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. 

இதில் கதிர், விவேக், ஜாக்கி ஷெரூப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். 

வரும் தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக தமிழ் புத்தாண்டு அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், விஜய் பிறந்தநாள் அன்று டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து, ரோல்ஸ் ராயல்ஸ் காரில் வெளியே வந்துள்ளார். அங்கு ஏராளமான ரசிகர்கள் அவரை பார்க்க கூடியிருந்தனர். விஜயை பார்த்து 'தளபதி தளபதி' என்று ஆரவாரம் செய்ய அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விஜய் வெளியே வந்து கை அசைத்தார். 

இதனைப் பலரும் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. 
 

share