Kollywood News

  • Home/
  • Cine News/
  • மருத்துவ உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட 'பிரண்ட்ஸ்' பட நாயகி விஜயலட்சுமி:

மருத்துவ உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட 'பிரண்ட்ஸ்' பட நாயகி விஜயலட்சுமி:

விஜய், சூர்யா இணைத்து நடித்த படம் 'பிரண்ட்ஸ்', அதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தவர் விஜயலட்சுமி. கன்னட சினிமாவில் நிறைய படங்கள் நடித்த இவர் இப்போது தமிழ் சீரியல்களில் நடிக்கிறார்.

அவருக்கு நடுவில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின் பணம் இன்றி தவிப்பதாகவும் கூறியிருந்தார், அதோடு கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஒருவர் கூட உதவி செய்யவில்லை என்றும் வீடியோ ஒன்றும் வெளியிட்டார்.

இதை அறிந்த முன்னணி நடிகரான சிவராஜ்குமார், விஜயலட்சுமிக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருக்க முடியாது, உடலில் குறையுள்ளவர்கள் கூட கடினமாக உழைத்து வாழ்கிறார்கள். அப்படி இருக்கும்போது நல்ல கை, கால்கள், மன தைரியம் இருப்பவரால் ஏன் தன்னை பார்த்துக்கொள்ள முடியவில்லை என பேசியுள்ளார்.

Read More about :

share