Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆர்யாவின் 'கஜினிகாந்த்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்யாவின் 'கஜினிகாந்த்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

'ஹர ஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது படம் 'கஜினிகாந்த்'. இந்த படம் முந்தைய இரண்டு படங்கள் போல் இல்லை என்பது இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் கொடுத்ததில் இருந்தே அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

ஆர்யா, சாயிஷா,, கருணாகரன், சதீஷ், காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முந்தைய இரண்டு படங்களை தயாரித்த ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலு ஒளிப்பதிவும் பிரசன்னா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜூலை 27ஆம் தேதி வெளியாகவுள்ளது,. ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக வெற்றிப்படங்களை கொடுக்காத ஆர்யாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Source : Indiaglitz

Read More about :

share