Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி விஜயை புகழ்ந்த ஞானசம்பந்தன்:

தளபதி விஜயை புகழ்ந்த ஞானசம்பந்தன்:

அட்லி இயக்கத்தில் விஜய் தளபதி63 படத்தின் படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளங்களில் ரசிகர்கள் தினமும் வந்த வண்ணம் இருக்கின்றார்கள்.

இப்படத்தில் விஜய் ஃபுட்பால் கோச்சாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், கதிர், யோகி பாபு, விவேக், என பலர் நடித்துவருகின்றனர்.

இப்படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்துவரும் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், நடிகருமான மதுரை ஞானசம்பந்தன் தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் விஜய் பற்றி கூறும்போது: என் மனதிற்கு பிடித்தமானவர் விஜய் என கூறியுள்ளார்.

share