Kollywood News

  • Home/
  • Cine News/
  • தமிழ் நாட்டிற்குள் வராதீர்கள் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர் .

தமிழ் நாட்டிற்குள் வராதீர்கள் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர் .

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டி உள்ளார். நெல்லை காவல்கிணறுவில் நடந்த போராட்டத்தின்போது, பாஜகவை சேர்ந்த சிலர் நடத்திய தாக்குதலைப் பொருட்படுத்தாமல் வைகோ போராட்டத்தை தொடர்ந்தார். அப்போது, வேனில் நின்றபடி ஆவேசமாக பேசிய வைகோ கருப்பு பலூன்களைப் பறக்க விட்டார். கருப்பு பலூன்களைப் பறக்க விட்டு போராட்டம் நடத்தியதால் பாஜகவினர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய வைகோ, அதானி, அம்பானி கம்பெனிகள் கொள்ளையடிக்க வழிவகுத்தவர்தான் மோடி என்று விமர்சனம் செய்தார். மேலும், காவேரி அணையின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முடிவு செய்து விட்டார்கள் என்று கூறிய வைகோ, மத்திய அரசு திட்ட ஆய்வுக்கு அனுமதி கொடுத்து விட்டது என்றார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்களை நீங்கள் தமிழர்களை புறக்கனித்தீர்கள் ஆகவே தமிழ் நாட்டிற்குள் வராதீர்கள் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர் .

Read More about :

share