விக்ரமைப் புகழ்ந்த தள்ளிய கெளதம் மேனன்!தன்னுடைய 51வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவரும் விக்ரம், தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் விஜய்சந்தர் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், நேற்று முந்தினம் மாலையே ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது டீஸரை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினார் கெளதம் மேனன். 

அத்துடன், “வாழ்த்துகள் விக்ரம். இந்தப் படத்தை எந்தக் கஷ்டமும் இல்லாமல் எளிதாக எடுக்க உதவினீர்கள். சின்ன மன அழுத்தம் கூட உங்களால் ஏற்படவில்லை” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். டீஸர் வெளியாகி ஒருநாள் கூட ஆகாத நிலையில், 11 லட்சம் பார்வையாளர்கள் அதைப் பார்த்துள்ளனர்.

share