Kollywood News

  • Home/
  • Cine News/
  • உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


கலையுலக பிதாமகன், சினிமாவுக்கென்றே பிறந்த ஒரு மகன் தமிழ் சினிமாவில் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு கூறலாம் அது கமலஹாசன் தான் என்று. 

தனது 63வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் உலக நாயகன் கமலஹாசன். சுமார் 56 வருடங்கள் சினிமா என்ற உலகில் தன்னை இணைத்துக் கொண்டு இன்னமு வெற்றி நடையுடனும், வீர நடையுடனும் பயணித்து வருகிறார். 

அவரின் புகழை கண்டும், வெற்றியைக் கண்டும் வியந்தவர்கள் பலர். அவரை முன்னோடியாக வைத்துக் கொண்டும் பலர் இந்த சினிமாவிற்குள் வந்து வெற்றியும் கண்டுள்ளனர். 

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார். பல விருதுகள், பல கேடயங்கள், பல பட்டங்கள் இவரது தலையில் புகழை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

சினிபில்லா சார்பாக உலக நாயகனுக்கு தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது..

Read More about :

share