Kollywood News

  • Home/
  • Cine News/
  • இனிய திருமண வாழ்த்துக்கள்

இனிய திருமண வாழ்த்துக்கள்

                         சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சிறிது நாட்களுக்கு முன் தன் கணவர் அஸ்வினுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தார். பின்னர் விசாகன் வணங்காமுடி என்பவரை திருமணம் செய்துகொள்ளபோவதாக அறிவிப்புகள் வெளியாகின. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்கள் திருமணத்தின் வரவேற்பானது சிறப்புற நடைபெற்றது. பல பிரபலங்களும் வந்து கலந்துகொண்டனர். இன்று காலை அவர்களது திருமணம் சிறப்புற நடைபெற்றது திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் சில அமைச்சர்களுடன் வந்து கலந்துகொண்டார். பின்னர் ம.தி.மு.க. கட்சியின் தலைவர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், நக்கீரன் கோபால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் ரஜினி அவர்களின் நண்பருமான கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்தினம், k.s. ரவிக்குமார் இன்னும் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

Read More about :

share