Kollywood News

  • Home/
  • Cine News/
  • இயக்குனரின் ஹரியின் உருக்கமான வேண்டுகோள்...

இயக்குனரின் ஹரியின் உருக்கமான வேண்டுகோள்...



இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’சி 3’. சிங்கம் படத்தின் மூன்றாம் பகுதியாக உருவாகியுள்ள இப்படம் வரும் 9 ஆம் திரைக்கு வர இருக்கிறது. இயக்குனர் ஹரி சமீபத்திய ஒரு பேட்டியில் பேசும் போது, ‘ மக்களை திருப்திபடுத்தவே நாங்கள் படமெடுக்கிறோம். நாங்கள் இஷ்டப்பட்டு வேலை செய்வதை போல தயாரிப்பாளர்கள் இஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டும் வேலை செய்கின்றனர். ஒரு தயாரிப்பாளருக்கு படம் எடுத்தால் மட்டும் லாபம் கிடைத்துவிடாது. அந்த படம் மக்களை சென்றடைந்து நல்ல வசூல் செய்தால் தான் லாபம் கிடைக்கும். எனவே இந்த படத்தை தயவுசெய்து திரையரங்கில் மட்டும் பாருங்கள்
 
இளைஞர்கள் தற்போது மிகப்பெரிய புரட்சி செய்துள்ளீர்கள். அதேபோல் மீண்டும் ஒரு புரட்சி செய்யும் வகையில் யாராவது இந்த படத்தை வேறு மீடியாக்களில் பார்க்காதீர்கள். அப்படி யாராவது பார்த்தால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். மேலும் ஒரு படத்தை திரையரங்கில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. இதை நான் ஒரு கிரியேட்டராக உணர்ந்து சொல்கிறேன். நகைச்சுவை காட்சியில் சிரிப்பு, சோகக்காட்சியில் கண்கலங்குவது திரையரங்குகளில் படம் பார்க்கும்போது மட்டுமே கிடைக்கும் உணர்வு.
 
அதேபோல் படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், இல்லையே கலாய்த்து விமர்சனம் செய்யுங்கள். இப்போது உங்கள் ஒவ்வொருவரின் கையிலும் மீடியா இருப்பதை இதை நீங்கள் தாராளமாக செய்யலாம். ஆனால் தயவுசெய்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என்பதை எனது தாழ்மையான வேண்டுகோளாக வைக்கின்றேன்.” என்றார்.

share