Kollywood News

  • Home/
  • Cine News/
  • என்னது வரலட்சுமிக்கு கல்யாணமா?

என்னது வரலட்சுமிக்கு கல்யாணமா?

தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருவதால், இப்போ திருமணம் கிடையாது என நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறினார். தற்போது தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் பல படங்களில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில், வரலட்சுமி சரத்குமார் திருமணம் தொடர்பாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வரலட்சுமி டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக தமிழ் சினிமாவில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை எனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகவில்லை. இப்போதைக்கு திருமணமும் செய்து கொள்ளப்போவதும் இல்லை. வேலையில்லாதவர்கள் இது போன்ற வதந்தி பரப்பியதற்கு மிக்க நன்றி. மேலும், என்னை தாழ்த்துவதற்கு முயற்சித்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உங்களால் அது முடியாது. ஏனென்றால், என்னுடைய கடின உழைப்பால் நான் மேலும் உயர்ந்து கொண்டிருக்கிறேன். கடின உழைப்பு ஒரு போதும் தோல்வியடையாது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share