Kollywood News

  • Home/
  • Cine News/
  • நான் ஒருத்தரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - நடிகை திரிஷா

நான் ஒருத்தரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - நடிகை திரிஷா

திரிஷாவை பற்றி அடிக்கடி திருமணம் மற்றும் காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பே திரிஷாவும் நடிகர் ராணாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. பின்னர் திரிஷாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா.

இந்நிலையில் திருமணம் பற்றி அவரிடம் கேட்டபோது, 'இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்வேன்' என கூறினார்.

share