Kollywood News

  • Home/
  • Cine News/
  • என்னை விட கமலுக்கே நல்ல பாடல்கள் தந்துள்ளார் இளையராஜா

என்னை விட கமலுக்கே நல்ல பாடல்கள் தந்துள்ளார் இளையராஜா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடந்த இளையராஜா 75 விழாவில் பங்கேற்று பேசினார். ரஜினிகாந்த் மட்டும் அல்லாது கமல்ஹாசன் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள், கலைஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் கலந்துகொண்டனர் . அந்த விழாவில் ரஜினி பேசுகையில் தனக்கும் இளையராஜாவுக்குமான நீண்டகால நட்பாகும் இளையராஜா தொழில் மீது கொண்ட பக்தியையும் அவர் ஆன்மீகத்தின் மேல் இருக்கும் ஆர்வம் பற்றியும் கலகலப்பாக பகிர்ந்துகொண்டார். இளையராவை ஆரம்ப காலங்களில் தான் சார் என்று அழைத்ததாகவும் பின்னர் அவர் வேஷ்டி ஜிப்பா போட்ட பின்னர் சாமி என்று அழைப்பதாகவும் இளையராஜாவும் அவ்வாரே அழைக்கிறார் என்றும் ரஜினிகாந்த் கூறினார். அப்பொழுது தன் படத்தைவிட கமல்ஹாசன் படத்திற்கே இளையராஜா நல்ல இசையை தந்துள்ளார் என்று வேடிக்கையாக கூற; இளையராஜா உடனே இதே  கமல் என்னிடம் ரஜினி படத்திற்கு தான் நீங்கள் நல்ல இசை தருகிறீர்கள் என்று கூறினார். இசை எலலோருக்கும் பொதுவானது எலலோருக்கும் ஒரே மாதிரி இசைதான் இறைவன் தருகிறார் நான் பாரபட்சம் பார்ப்பது இல்லை என்ற வண்ணம் கூறினார்.

Read More about :

share