Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'கொலைகாரன் படத்தின் தலைப்பை நான் தேர்வு செய்யவில்லை' - இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்

'கொலைகாரன் படத்தின் தலைப்பை நான் தேர்வு செய்யவில்லை' - இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்

இசையமைப்பாளராக இருந்து தமிழசினிமாவில் முன்னணி  நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி அடுத்து அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் படம் 'கொலைகாரன்'. 

படம் பற்றி இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில் 'நகரத்தில் அடுத்து அடுத்து கொடூரமான கொலைகள் நடக்கின்றன. கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜுன் விசாரிக்கிறார். விஜய் ஆண்டனி தான் சைக்கோ கொலைகாரன் என்பது தெரிய வருகிறது. காரணம் என்ன? என்பதே மிதி கதை. படம் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறது. ஹாலிவுட் படத்துக்கு எல்லாம் சவால் விடும் வகையில் திரைக்கதை இருக்கும். படம் பார்ப்பவர்கள் இதை உணர்வார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், விஜய் ஆண்டனி படத்துக்கு முதன் முறையாக சைமன் இசையமைக்கிறார். முகேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நடிக்கிறார். ஆஷிமா, ஆஸ்திரேலியாவில் 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அழகியாக தேர்வானவர். இந்த படத்தின் பெயரை விஜய் ஆண்டனிதான் தேர்வு செய்தார்' என கூறினார்.

share