Kollywood News

  • Home/
  • Cine News/
  • தமிழ் சினிமாவிற்கு உங்களைப் போன்று தான் ஒரு வில்லன் தேவை

தமிழ் சினிமாவிற்கு உங்களைப் போன்று தான் ஒரு வில்லன் தேவை

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் இமைக்கா நொடிகள்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இப்படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப்பிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சிறப்பான தோற்றத்தில் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார்.

அனுராக் காஷ்யப் இன்னமும் மும்பையில் தான் இருக்கிறாராம். இது குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், அனுராக் காஷ்யப் சார் ஏன் இன்னமும் மும்பையில் இருக்கிறீர்கள்? நீங்கள் சென்னைக்கு வருவதற்கு இது தான் சரியான நேரம். உங்களது இமைக்கா நொடிகள் படத்திற்கு என்னவொரு கைதட்டல், விசில் தெரியுமா? தமிழ் சினிமாவிற்கு உங்களைப் போன்று தான் ஒரு வில்லன் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

share