Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படம் குறித்த முக்கிய அப்டேட்

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படம் குறித்த முக்கிய அப்டேட்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'இமைக்கா நொடிகள்'. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 27ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா தான் நடிக்கும் எந்த படத்தின் புரமோஷனில் கலந்து கொள்வதில்லை என்ற நிலையில் இந்த விழாவில் அவர் கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

'டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதி நயன்தாராவுக்கு ஜோடியாக ஒருசில காட்சிகளில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை . கேமியோ பிலிம்ஸ்' ஜெயக்குமாரின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது.

Source : Indiaglitz

Read More about :

share