Kollywood News

  • Home/
  • Cine News/
  • இந்தியன் 2 பற்றிய அறிவிப்பு கமல்ஹாசன்

இந்தியன் 2 பற்றிய அறிவிப்பு கமல்ஹாசன்

  நடிகரும் பன்முக திறமைகொண்டவருமான கமல்ஹாசன் அவர்கள் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் அரசியலிலும் கால் பதித்து ஒரே நேரத்தில் இரண்டு குதிரையகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்துவருகிறார். அரசியலிலும் தன்னுடைய கருத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க தவறுவதில்லை கமல்ஹாசன்.


   இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு. இந்தியன் 2 படத்தில் ஒப்பனையில் ஏதோ பிரச்சனை அதனால் படம் நின்றது என்று கூறும் தகவல் உண்மையா? என்று கேட்டதற்கு; அப்படி ஏதும் இல்லை இந்தியன் 2 மிக சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது என்றும் படம் அனைவரையும் த்ரிப்திப்படுத்தும் விதமாக வந்திருக்கிறது ரசிகர்களுக்கு விரைவில் படத்தை பற்றிய அறிவிப்பு வரும் அது தான் ஷங்கரின் ஆசையும் என்று கூறினார். மேலும் தான் நடிக்க ஒப்புக்கொண்ட சபாஷ் நாயுடு, தேவர் மகன் 2 ஆகிய படங்களில் நடிப்பதாகவும் அரசியலுக்கு முன்னர் தான் இந்த படங்களை நடித்து முடித்துவிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More about :

share