Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’இந்தியன்-2’ல் கமலோடு கைகோர்க்கிறார் நயன்தாரா..??

’இந்தியன்-2’ல் கமலோடு கைகோர்க்கிறார் நயன்தாரா..??



இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக விரைவில் உருவாக இருக்கிறது ‘இந்தியன்-2’.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் 'அறம்' படத்தை பார்த்த பாதிப்பில் இந்த படத்தில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஷங்கர் விரும்புகிறாராம். அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

நயன்தாரா கேட்கும் மிக அதிக சம்பளத்தை கொடுக்க லைக்காவும் தயாராக இருப்பதால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்றே கூறப்படுகிறது.

இந்த படத்தில் நயன்தாராவுக்கு முதல் பாகத்தில் சுகன்யா நடித்தது போன்ற புரட்சிப்பெண் வேடமாம்.

share