Kollywood News

  • Home/
  • Cine News/
  • கேப்டன் வந்து நடுவர்கள் கிட்ட பேசுறது கிரிக்கெட் விதிமுறைக்கு புறம்பானது

கேப்டன் வந்து நடுவர்கள் கிட்ட பேசுறது கிரிக்கெட் விதிமுறைக்கு புறம்பானது

சம்மர் சீசன் வந்தாலே இந்தியா IPL கொண்டாட்டத்துக்கு ரெடி ஆயிடும்; இந்த IPL  சீசன் நிறைய ஆட்டங்கள் சுவாரஸ்யமா இருந்தாலும்; நேத்து CSK விளையாடுன ஆட்டத்தை யாருமே மறக்க மாட்டாங்க அப்படி ஒரு ஆட்டம் நேத்து. இதுல எல்லாருக்கும் புடிச்ச ஒரு விஷயம் என்னனா நம்ம தல தோனி நோ பால் இல்லனு சொன்னதுக்கு ஆட்டத்துக்கு நடுவுல போய் கெத்தா ஒரு சண்டை போட்டாரு நடுவர்கள் கிட்ட. அந்த நேரம் எல்லா தோனி ரசிகர்களுக்கும் புல்லரிச்சுற்க்கும். ஆனா நடந்தது வேற இப்படி ஆட்டத்துக்கு நடுவுல கேப்டன் வந்து நடுவர்கள் கிட்ட பேசுறது கிரிக்கெட் விதிமுறைக்கு புறம்பானது அதுனால 50% தோனி ஓட சம்பளத்துலேந்து ஒழுங்கு நடவடிக்கைக்காக புடிக்குறதா கிரிக்கெட் வாரியம் அறிவிச்சிருக்காங்க இந்த தகவல் அறிஞ்ச நெட்டிசன்கள் தல செஞ்சது கரெக்ட்; தப்பான முடிவு குடுத்த நடுவர் மேல தான் நடவடிக்கை எடுக்கணும்னு கருத்து தெரிவிச்சுக்கங்க. கிரிக்கெட் விமர்சகர்கள் இந்த செயலை கடுமையா எதிர்த்தும் இருக்காங்க. ஆனா நம்ம தல தோனி என்ன பண்ணாலும் அவரோட ரசிகர்களுக்கு அது விருந்து தான்.
 

Read More about :

share