Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிம்பு எம்ஆர் ராதாவாக நடிக்கிறாரா?

சிம்பு எம்ஆர் ராதாவாக நடிக்கிறாரா?

நடிகர் சிம்பு தற்போது லண்டனில் இருக்கும் நிலையில் அவரது அடுத்த இரண்டு படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநாடு படம் மற்றும் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படம் என இந்த வருடம் சிம்பு பிஸியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சிம்பு நடிகர் எம்ஆர் ராதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் என நேற்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

ஆனால் இந்த படத்தை இயக்கும் எம்.ஆர்.ராதா பேரன் இயக்குனர் ஜக் இந்த செய்தியை வதந்தி என கூறியுள்ளார். சிம்பு அதில் நடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

Read More about :

share