ஜெய்-அஞ்சலி காதல் மீண்டும் தொடர்கிறதா?

நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலி காதலித்து வருவதாக கோலிவுட்டில் கூறப்பட்டது. இதனை உறுதி செய்வதை போல ஜெய் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் பரஸ்பரம் தங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஜெய்-அஞ்சலி இணைந்து நடித்த பலூன் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையிலான காதல் நெருக்கமானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜெய் பிறந்த நாளான்று அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று உங்களுடைய சிறப்பான நாளில் உலகின் அனைத்து சந்தோஷங்களும் கிடைக்கட்டும் என அஞ்சலி வாழ்த்தியுள்ளார். இதன்மூலம் இருவரும் பிரிந்துவிட்டதாக எழுந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக கருதப்படுகிறது.

Source : Indiaglitz

Read More about :

share