ஜெய் நடிப்பில் உருவாகும் 'நீயா-2'!


துரை இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடித்து, 1979ம் ஆண்டு வெளியான படம் 'நீயா'. அந்த காலகட்டத்திலேயே சிறந்த திரில்லர் படமாக இப்படம் பெரும் வெற்றியினை அடைந்தது.

இந்நிலையில் தற்போது இதே தலைப்பில், எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் ஜெய்.யை ஹீரோவாக வைத்து புது படம் ஒன்றினை எடுக்கவுள்ளார். இதில் ஜெய்க்கு ஜோடியாக ராய் லட்சுமி, வரலட்சுமி, கேத்ரின் தெரசா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கமலின் 'நீயா' படத்திற்கும் தற்போது எடுக்கவிருக்கும் 'நீயா-2' படத்தின் கதைக்களத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More about :

share