Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி ''சசிலலிதா'' உருவாகிறது:

ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி ''சசிலலிதா'' உருவாகிறது:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படம் எடுக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான இயக்குனர்கள் பட்டியலில் கவுதம் வாசுதேவ மேனன், ஏ.எல்.விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர்.

பிரியதர்ஷினி முதல் ஆளாக ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை அறிவித்தார். இவர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். ''த அயர்ன் லேடி'' என்ற பெயரில் இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யாமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கும் ''தலைவி'' படத்தில், ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இந்த வேடத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தனர். இறுதியில் கங்கனா ரணாவத் நடிப்பது உறுதியானது. 

இது தவிர கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ''குயின்'' என்ற தலைப்பில் இணை தொடராக, ஜெயலலிதா வாழ்க்கை படம் உருவாகி வருகிறது .

இந்த படங்களுக்கு இடையே ''சசிலலிதா'' என்ற பெயரில் இன்னொரு படம் உருவாகிறது. தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் ''பர்ஸ்ட் லுக் போஸ்டர்'' வெளியாகிவுள்ளது. இந்த படம், இரண்டு பாகமாக உருவாகிறது. படத்தின் போஸ்டரில் ஜெயலலிதா சசிகலா இருவரின் புகைபடங்களும் உள்ளன.

share