Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஜெயலலிதா வாழ்கை வரலாற்றில் நடிக்க கங்கனாவுக்கு இத்தனை கோடி ரூபாய் சம்பளமா?

ஜெயலலிதா வாழ்கை வரலாற்றில் நடிக்க கங்கனாவுக்கு இத்தனை கோடி ரூபாய் சம்பளமா?

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க இயக்குநர்கள் பலரும் போட்டி போடுகிறார்கள். இதற்கிடையில் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணை தொடராக இயக்கி வருகிறார்.

ஏ.எல்.விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைபடத்திற்கு 'தலைவி' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க பாலிவுட்  நடிகை கங்கனா ரணாவத் ஒப்பந்தமாகி உள்ளார்.

இதுபற்றி இயக்குனர் ஏ.எல்.விஜய் கூறும்போது, இந்தியாவின் முக்கியமான தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கையை வரலாற்றுப்படமாக 'தலைவி' என்ற பெயரில் படமாக்குவது பெருமையாக இருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் நடிப்பது மேலும் சிறப்பானது என்றார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ 24 கோடி சம்பளம் வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் நடிக்க எந்த ஒரு நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. முதன்முறையாக கங்கனாவுக்கு வழங்கப்பட இருக்கிறது. கங்கனா தற்போது ‘பங்கா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு முடித்த பிறகு தலைவி படப்பிடிப்பில் இணையவுள்ளார். படப்பிடிப்பு ஏப்ரலில் ஆரம்பம் ஆகிறது.

share