Kollywood News

ஜெயம் ரவி 24:

                        இளம் கதாநாயகர்களில் தரமான வெற்றி படங்களை தந்து தனக்கென ஒரு ரசிகர்ப்பட்டாளத்தை வைத்திருப்பவர் ஜெயம் ரவி. அவர் தனது 25வது படத்தை தன் அண்ணன் ராஜாவிடம் ஒப்படைத்துள்ளார். அவர்களது வெற்றிக்கூட்டணியான தனி ஒருவன் 2 தான் அந்த படம் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் தனது 24 வது படத்தின் புதிய தகவலை பதிவிட்டுள்ளார் ரவி. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் உருவாகும் இந்த படத்தின் புதிய தகவலாக; படத்தின் இயக்குனர் ட்விட்டரில் படத்தின் தலைப்பை ரசிகர்களே தேர்வு செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இது படத்தின் விளம்பரத்திற்கு ஏதுவாகும். kv .ஆனந்த் இயக்கி சூர்யா நடித்து வரும் காப்பான் படத்தின் தலைப்பையும் இவ்வாறே தேர்வு செய்தனர்.

Read More about :

share