Kollywood News

  • Home/
  • Cine News/
  • இரட்டை விருந்துக்காக காத்திருக்கும் ஜீவா... கனவு பலிக்குமா..???

இரட்டை விருந்துக்காக காத்திருக்கும் ஜீவா... கனவு பலிக்குமா..???



நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கீ வரும் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே தேதியில் தான் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘கலகலப்பு 2’ படமும் வெளியாகவுள்ளது. 

ஒரே நாளில் தந்து இரண்டு படமும் வெளியாகவுள்ளதால் ஆனந்த சந்தோஷத்தில் இருக்கிறார் ஜீவா. 

கடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ஒரே படம் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’. இந்த படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஜீவா நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகவிருப்பது, ஜீவாவுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை தரும் விஷயம் என்பதில் ஐயமில்லை.

இருந்தாலும் பல படங்கள் ரிலீஸுக்கு முந்திய நாள் காலை வாரிக் கொண்டு வெளியே சென்று விடுகின்றன. இந்நிலையில் இந்த இரு படங்களும் ஒரேநாளில் வெளிவருமா வராதா என்பது குறித்து ரிலீஸுக்கு முந்தைய தினம் வரை காத்துக் கொண்டு தான் இருக்க வேண்டும் போல..

share