Kollywood News

  • Home/
  • Cine News/
  • இந்த ஆட்சி வேண்டாம் என்று மக்கள் சொல்கிறார்களே ...மீண்டும் கொதித்தெழும் ஜூலி!

இந்த ஆட்சி வேண்டாம் என்று மக்கள் சொல்கிறார்களே ...மீண்டும் கொதித்தெழும் ஜூலி!


சென்னை: மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் அரசு தான் இது. இந்தக் கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா? என்று ஜூலி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்தி மக்களின் தலையில் இடியை இறக்கிவிட்டது. தினமும் பேருந்தில் பயணம் செய்பவர்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சற்று பிரபலமாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலாகவும் உலாவந்த ஜூலி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பேருந்து பயணக்கட்டண உயர்வு குறித்து ஆளும் அரசுக்கு எதிராக கருத்தினை பதிவு செய்துள்ளார். 

இதோ அந்த பதிவு, ‘ பேருந்துகள் மக்களின் சொத்து. கட்டண உயர்வை மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறது ஆளும் அரசு. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் அரசுதான் இது. இந்தக்  கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா? ’ என்று கூறியுள்ளார்.  

share