Kollywood News

  • Home/
  • Cine News/
  • காதலருடன் ஜோடிசேரும் பிக்பாஸ் ஜூலி

காதலருடன் ஜோடிசேரும் பிக்பாஸ் ஜூலி

ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் ஜூலி.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பார்வையாளர்களின் கடும் வெறுப்பை ஜூலி பெற்றாலும், திரையுலகில் வாய்ப்புகள் பெற்று பிசியாகி உள்ளார். இவர் ஏற்கனவே ‘அனிதா எம்பிபிஎஸ்’, ‘அம்மன் தாயே’, ‘உத்தமி’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஜுலியின் காதலர் மார்க் ஹம்ரான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜூலி நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் எழில்துரை இயக்குகிறார்.

share