Kollywood News

  • Home/
  • Cine News/
  • வித்யா பாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா!

வித்யா பாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா!



நாச்சியார் படத்தின் தனது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருந்த ஜோதிகா, அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். 

இதனை தொடர்ந்து அடுத்து ஹிந்தியின் வெளியாகி பிளாக் பஸ்டர் சாதனை செய்த துமாரி சுலு என்ற படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளதாகவும், அதில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தை ஜோதிகா நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

 ஒரு குடும்பப்பெண் ஒரு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகி எப்படி கலக்குகிறார் என்பது தான் இப்படத்தின் கதையாம். எனினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

share