’காக்கா முட்டை’லா ஒரு படமா..?? வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்!தனுஷ் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவானது ‘காக்கா முட்டை’. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் தற்போது காலா மற்றும் கபாலி படத்தின் இயக்குனரான பா ரஞ்சித் சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘ அனைவருமே கெட்டவர்களாக காட்டப்பட்டு இருக்கிறார்கள். சென்னை சேரி மக்கள் என்றாலே கெட்டவர்கள் தானா? மகனை பள்ளிக்கு அனுப்பாமல் கரி எடுக்க அனுப்புவது சரியா?


எனக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்கவில்லை, நானும் இப்படியான குடும்பத்தில் பிறந்தவன் தான், நான் பள்ளிக்கு செல்லவில்லை என்றால் என் அம்மா என்னை அடி வெளுத்து விடுவார்’ என்று கூறியுள்ளார். 

share