Kollywood News

  • Home/
  • Cine News/
  • சென்னையில் 'காலா' செய்த வசூல் மழை

சென்னையில் 'காலா' செய்த வசூல் மழை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவந்து வசூல் மழை பொழிந்து வருகிறது. பல்வேறு தடைகளை தாண்டி வெளிவந்துள்ள இந்த படம் வசூலிலும் பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் 'காலா' திரைப்படம் ரிலீசான முதல் நாளே ரூ.1.74 கோடி வசூலித்து புதிய சாதனை செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது முதல் வார இறுதியிலும் மிகப்பெரிய தொகையை இந்த படம் வசூலித்துள்ளது. படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக குடும்பத்துடன் இந்த படத்தை பார்வையாளர்கள் பார்த்ததால் கிட்டத்தட்ட சென்னையின் அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் திரையரங்குகளை முழுவதுமாக ஆக்கிரமித்தனர்.

சென்னையில் இந்த படம் கடந்த வாரயிறுதி நாட்களில் 19 திரையரங்க வளாகங்களில் 746 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.4,87,93,588 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் ஜூன் 7 முதல் 10 ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் மட்டும் ரூ.6,64,03,397 வசூல் செய்து மிகச்சிறந்த ஓப்பனிங் வசூல் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

Source : Indiaglitz

Read More about :

share