Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரூ.10 கோடியை தாண்டியது 'காலா'வின் சென்னை வசூல்

ரூ.10 கோடியை தாண்டியது 'காலா'வின் சென்னை வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் கடந்த 7ஆம் தேதி வெளிவந்த 'காலா' திரைப்படத்திற்கு பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒருசில கலவையான விமர்சனங்களும் கிடைத்தது. இருப்பினும் ரிலீஸ் ஆன நாள் முதல் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் குடும்ப ஆடியன்ஸ்கள் இந்த படத்திற்கு அதிகளவில் வந்ததாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் 'காலா' திரைப்படம் கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் 17 திரையரங்க வளாகங்களில் 362 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,62,04,523 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு திரையரங்குகளில் 85% ஆடியன்ஸ் இருந்தனர் என்பதே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

மேலும் இந்த படம் வெளியான ஜூன் 7ஆம் தேதியில் இருந்து நேற்று வரை ரூ.10,29,38,697 சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் சென்னையில் ரூ.10 கோடி வசூலான படங்களின் பட்டியலில் 'காலாவும் இணைந்துள்ளது. இதுவரை சென்னையில் அதிகளவில் வசூலான படங்களின் பட்டியலில் தற்போது 6வது இடத்தில் இருக்கும் 'காலா' விரைவில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Source : Indiaglitz

Read More about :

share