'காலா’ டீசர் எப்போது ??? வெளிவந்த புதிய தகவல்கள்!


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வந்த ‘காலா’ வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தினை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியீடு குறித்து தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது. டீசர் மற்றும் பாடல்கள் வரும் மார்ச் மாத இறுதியில் வெளிவர இருப்பதாக தெரிகிறது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறதாம்.

இப்படத்தில் சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

share