Kollywood News

  • Home/
  • Cine News/
  • தொடங்கியது ‘காலா’ டப்பிங்... ரிலீஸ் பற்றி படக்குழு முக்கிய அறிவிப்பு!

தொடங்கியது ‘காலா’ டப்பிங்... ரிலீஸ் பற்றி படக்குழு முக்கிய அறிவிப்பு!



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கும் படம் காலா. வுண்டர்பேர் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்த படம், கபாலி திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாரும் - பா.ரஞ்சித்தும்  இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் சூட்டிங் முற்று பெற்ற நிலையில், போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டப்பிங் இன்று சென்னையில் உள்ள KNACK ஸ்டூடியோவில் தொடங்கியது. 

இன்று நடைபெற்ற பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் கலந்து கொண்டார். ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2.ஓ’ 2018 ஏப்ரல் மாத வெளியீடாக வர இருக்கிறது. ஆகவே காலா படத்தினை ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

share