Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷ், சிம்புவை ஓவர் டேக் செய்த விஜய் ஆண்டனி!

தனுஷ், சிம்புவை ஓவர் டேக் செய்த விஜய் ஆண்டனி!


விஜய் ஆண்டனி நடிப்பில் 'காளி' என்னும் படத்தினை 'வணக்கம் சென்னை' படத்தினை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.

இப்படம் அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ளது. இது குறித்து சமீபத்தில் கிருத்திகாவை சந்தித்து பேசிய போது அவரிடம், முதல் படத்திற்கு பிறகு ஏன் நீண்ட இடைவேளை என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், "நான் கதை எழுதிவிட்டேன், ஆனால் நடிகர், தயாரிப்பாளருக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். இந்த கதையை சிம்பு, தனுஷ் இருவரிடமும் கூறியிருந்தேன், இருவருக்கும் பிடித்துவிட்டது, ஆனால் சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியவில்லை. 

பின்பு, இந்த கதை விஜய் ஆண்டனிக்கு பிடித்து போக அவர் நடித்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்

share