Kollywood News

  • Home/
  • Cine News/
  • 1700 திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது ’காஷ்மோரா’...

1700 திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது ’காஷ்மோரா’...


கார்த்தி, நயன்தாரா மற்றும் ஸ்ரீ திவ்யா நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது 'காஷ்மோரா’. கிட்டத்தட்ட 70 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளி முதல் திரையரங்குகளை வேட்டையாட காத்துக் கொண்டிருக்கிறது.

கார்த்தியின் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு படமாக உருவாகியுள்ளது இந்த காஷ்மோரா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோகுல் இயக்கியிருக்கிறார். 

சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் சுமார் 1700 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.. 

share