Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயன்தாரா தான் படத்தின் ஹைலைட் - காஷ்மோரா குறித்து கார்த்தி....

நயன்தாரா தான் படத்தின் ஹைலைட் - காஷ்மோரா குறித்து கார்த்தி....


வரும் தீபாவளியை மையம் கொண்டு மிகவும் பிரம்மாண்டமாக களம் இறங்கவிருக்கிறது கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காஷ்மோரா’. இப்படத்தில் நாயகிகளாக நயன்தாரா மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ளனர். கோகுல் இயக்கியிருக்கிறார்.

மேலும், இப்படத்தில் கார்த்தி மூன்று வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தினை குறித்து கார்த்தி கூறும் போது,

‘நான் காஷ்மோராவில் மூன்று வேடங்களில் நடித்தாலும், நயன்தாரா வரும் காட்சிகள் மட்டுமே மிகவும் ஹைலைட்டாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார். 

share