Kollywood News

  • Home/
  • Cine News/
  • கபாலி ஜோடி தற்போது தனுஷின் ஜோடியாகிறார்..!!

கபாலி ஜோடி தற்போது தனுஷின் ஜோடியாகிறார்..!!


தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் கனவு படமான ‘வட சென்னை’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த படத்தினை முடித்த கையோடு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்ஜுடன் இணைகிறார் தனுஷ். இறைவி படத்திற்கு பிறகு தனுஷிற்காக ஒரு கதை தயார் செய்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. மேலும், படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

கபாலியில் ரஜினிக்கு ஜோடியாக இவர் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

share