Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதியின் “காதலும் கடந்து போகும்” வெளிவரும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் “காதலும் கடந்து போகும்” வெளிவரும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


சூது கவ்வும் படத்திற்கு பிறகு இயக்குனர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் “காதலும் கடந்து போகும்” படத்தின் வெளி வரும் தேதியினை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர் அனைவரின் பாராட்டினையும் பெற்றது. இதனால் படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

நாயகியாக பிரேமம் படத்தில் நடித்த மடோனா செபஸ்டின் நடித்துள்ளார்.

 காதலர் தினத்தினை முன்னிட்டு வரும் பிப்ரவர் 12 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படத்தினை வெளியிடும் அபி & அபி நிறுவனத்தினர்.

 

share