ஸ்மார்ட் ரேஷன் கார்டில் காஜல் அகர்வால் படம்!ஓமலூர் அருகே, பெண் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

ஆனால், சொன்ன நேரத்தில் கார்டுகள் விநியோகிக்கப்படாத காரணத்தினால், ஏற்கனவே இருந்த ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டப்பட்டுவருகிறது. எட்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின், கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

அதிலும், முறையான திட்டமிடல் இல்லாததால், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுவருவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஓமலூர் அருகே செட்டிபட்டி பகுதியில், பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில், அவரது புகைப்படத்துக்குப் பதிலாக, நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தவறு அச்சடிக்கும் போது ஏற்பட்டிருக்க கூடும் என்றும், இ-சேவை மையத்தில் கொடுத்து புகைப்படத்தினை மாற்றி கொள்ளலாம் என்றும் அரசு இதற்கு விளக்கமளித்துள்ளது.

share