Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சர்க்கார் படத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு

விஜய் சர்க்கார் படத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்திற்கு அதிமுகவினர்களின் எதிர்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஒருசில திரையரங்குகளில் சர்கார்' காட்சிகள் ரத்து செய்யும் அளவுக்கு போராட்டம் வலுத்து வருவதால் படக்குழுவினர்கல் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். 

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் 'சர்கார்' படத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும். என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Read More about :

share