கையில் தூக்கப்பட்ட ‘விஸ்வரூபம் 2’.. கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்!பெரும் போராட்டத்திற்கு பிறகு கமலின் விஸ்வரூபம் வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என கமல் தெரிவித்திருந்தார். ஆனால், படத்தினை பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் இப்படத்தினை பற்றி ‘ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருப்பவரும் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கியவருமான ராஜேஷ் எம்.செல்வா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  விஸ்வரூபம்-2’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது. 

இப்படத்தின் தெலுங்கு, ஹிந்தி பதிப்புகளுக்கான டப்பிங் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூப்பராக வந்திருக்கிறது, ஹேப்பி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

இதனால் கமல் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

share