Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே முழு நேரமும் ஈடுபடும் கமல், அரசியலில் எப்போது சாதிக்க போகிறார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே முழு நேரமும் ஈடுபடும் கமல், அரசியலில் எப்போது சாதிக்க போகிறார்?

கட்சி தொடங்குவதற்கு முன்னரே தமிழக அரசு குறித்து பல்வேறு விவகாரத்தில் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்வார் என்று பார்த்தால் பிக்பாஸில் உட்கார்ந்து கொண்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முழு கவனம் செலுத்தி வருகிறார் கமல். அங்கு அறிவுரை கூறுவது என கமல் தனது நேரத்தை செலவளிக்கிறார்.

சபாஷ்நாயுடு, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். அவர் ஒரு படத்தை எப்போது முடிப்பார் என்று கணிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. 

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் எப்படியாயினும் வெற்றி பெற ஜாம்பவான்களான கட்சிகளே இப்போது வியூகம் வகுத்து வரும் நிலையில் புதிதாக கட்சி தொடங்கிய கமல்ஹாசன் எப்படி இருக்க வேண்டும்?

பொது வாழ்க்கைக்கு வரும் கமல் இன்னும் படத்தில் நடித்து கொண்டிருந்தால் அரசியலில் எப்படி கவனம் செலுத்த முடியும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கால், இந்தியனில் ஒரு கால், நடுவில் நாயுடு, எப்பயாவது அரசியல் என்றிருந்தால் எப்படி.

கமல் மக்கள் மனதில் இடம்பெறுவதற்கான எந்த ஒரு துரும்பையும் நகர்த்தவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தியாகும்.

Read More about :

share