இத்தோடு நிறுத்திக்கோங்க... கமலுக்கு அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை!



தமிழ் சினிமாவிற்கான கேளிக்கை வரி குறித்து நடிகர் கமல் கருத்து கூறியதற்கு பதில் அளித்த தமிழக அமைச்சர் எஸ் பி வேலுமணி, ‘ நடிகர் கமலஹாசன் இப்போது தான் தமிழகத்தில் இருக்கிறாரா? இதற்கு முன்பெல்லாம் எங்கே சென்றார். முன்பெல்லாம் அவர் இவ்வாறு பேசுவது கிடையாது.  ஆனால் சமீப காலமாக ஆதாரம் இல்லாமல் பேசி வருகிறார். சினிமாவுக்கு கேளிக்கை வரி பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு திரைதுறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இது கமலஹாசனுக்கும் தெரியும். ஆனால் அவர் எந்த ஆதாரமும் இல்லாமல் தமிழக அரசை குறை கூறிவருகிறார். ஊழல் குறித்து அவர் நிரூபிக்க தயாரா? ஆதாரம் இருக்கிறதா?  ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசக்கூடாது. எனவே அ.தி.மு.க. அரசை குறை கூறுவதை கமலஹாசன் இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும். அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. 

தமிழக அரசின் திட்டங்களுக்கு டெல்லி சென்று கேட்டவுடன் மத்திய அரசு 1500 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தின் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே கமலஹாசன் இனியாவது விபரங்கள் தெரிந்து  கொண்டு பேசவேண்டும். மேலும் கமலஹாசன் இதுவரை அவர் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை அவர் விளக்குவாரா? ஆய்வு செய்யட்டுமா” என்று கூறினார். 

share