Kollywood News

  • Home/
  • Cine News/
  • அமெரிக்காவில் போலீசிடம் சிக்கிய கார்த்தி..!!

அமெரிக்காவில் போலீசிடம் சிக்கிய கார்த்தி..!!


நடிகர் கார்த்தி சில நாட்களுக்கு முன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது தன் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்ற ஒன்று இருக்கிறது. அதை இந்த சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஒரு உண்மை கூறினார்.

”அப்போது நான் அமெரிக்காவில் பட்ட படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் இரவு நேரம் நான் காரில் சென்று கொண்டிருந்த போது போலீசார் என் காரை மறித்து அதிவேகத்தில் வந்ததாக எனக்கு அபராதம் விதித்தார்கள். 

 என்னிடம் அந்த சமயம் பணம் இல்லை, என் நண்பர்கள் அந்த அபராதத்தை செலுத்தி என்னை அழைத்துச் சென்றார்கள். இந்த நிகழ்வு என் வீட்டில் இன்று வரை யாருக்கும் தெரியாது. இன்று தான் நானே இங்கு கூறுகிறேன்.” என்றார்.

share