Kollywood News

  • Home/
  • Cine News/
  • மேயாத மான் வெற்றியால் கார்த்தியோடு டூயட் பாடப்போகும் பிரியா..

மேயாத மான் வெற்றியால் கார்த்தியோடு டூயட் பாடப்போகும் பிரியா..



விஜய் டிவியில் 'கல்யாணம் முதல் காதல் வரை' என்னும் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் பிரியா பவானி ஷங்கர். அண்மையில் அதிலிருந்து விலகிய பிரியா வைபவ் ஜோடியாக 'மேயாத மான்' படத்தில் நடித்துள்ளார். 

இதில் நடித்த ப்ரியாவை அடுத்த திரிஷா என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனை அடுத்து ப்ரியா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வரும் கார்த்தி அதனை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தின் மற்றொரு நாயகியாக பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனும் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் படமான 'கொடி'.யில் தமிழில் அறிமுகமானவர்.

share