Kollywood News

  • Home/
  • Cine News/
  • கார்த்தியின் தேவ் படத்திற்கு யு சான்றிதழ்

கார்த்தியின் தேவ் படத்திற்கு யு சான்றிதழ்

             தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் போன்ற பிளாக் பஸ்டர் வெற்றிகளை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் அடுத்த படம் தேவ். இந்த படம் வருகிற feb 14 காதலர்கள் தினத்தன்று வெளியாகிறது. மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும்விதமாக படம் அமையும் என்றும் கார்த்தியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக தேவ் அமையும் என்றும் ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர். 
            தேவ் படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து படம் யு சான்றிதழ் பெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் படத்திற்கு துள்ளலான இசை அமைத்திருக்கிறார். VIP இயக்குனர் வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதுமுக இயக்குனர் ரஜத் இயக்க ரகூல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன் இவர்களுடன் முக்கிய வேடத்தில் RJ விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

Read More about :

share