Kollywood News

  • Home/
  • Cine News/
  • பணமழையில் நனையும் விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’

பணமழையில் நனையும் விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’


விஜய் சேதுபதி நடிப்பில் ஸ்ரீசாய்ராம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் கருப்பன்.

 பாபி சிம்ஹா, பசுபதி, தான்யா நடித்துள்ள கருப்பன் திரைப்படத்தை  ரேணிகுண்டா பன்னீர்செல்வம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார்.

கருப்பன் தியேட்டர்களில் ரீலீஸ் ஆன செப்டம்பர் 29 முதல்வசூலில் முதலிடத்தில் உள்ளது.தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் கருப்பன் குடும்பத்துடன் பார்க்கும்படமாக மாறி வருகிறது. 

முதல் நாள் 4 கோடி மொத்த வசூல் ஆன கருப்பன் சனி ஞாயிற்றுகிழமைகளில் 10 கோடி வரை தியேட்டர்களில் வசூல் செய்திருக்கிறது. 

எல்லோருக்கும் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி நாயகன் என்பதால் பழைய சாதமாக கதை இருந்தாலும் பார்க்க கூடிய படமாக கருப்பன் இருப்பதால் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்க வருகின்றனர்.

share