Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’காஷ்மோரா’ எனக்கு இன்னொரு ஆயிரத்தில் ஒருவன் மாதிரி - கார்த்தி...

’காஷ்மோரா’ எனக்கு இன்னொரு ஆயிரத்தில் ஒருவன் மாதிரி - கார்த்தி...



கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உருவாகி வருகிறது ‘காஷ்மோரா’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா நாயகிகளாக நடித்துள்ளனர். இன்றுடன் இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் கார்த்தி.

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு மிகவும் சவாலான ஒரு கதாபாத்திரம் இந்த காஷ்மோரா என்று கார்த்தி கூறியுள்ளார். இந்த படத்தில் கார்த்தி மூன்று வெவ்வேறு தோற்றத்தில் தோன்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் தீபாவளி அன்று படத்தினை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

share