Kollywood News

  • Home/
  • Cine News/
  • சசிகுமார் படத்தில் நடிக்கவில்லை : கீர்த்தி சுரேஷ்

சசிகுமார் படத்தில் நடிக்கவில்லை : கீர்த்தி சுரேஷ்

சசிகுமார், லட்சுமி மேனன் நடித்து சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய. எஸ்.ஆர்.பிரபாகரன், அதற்கு பிறகு உதயநிதி  ஸ்டாலின், நயன்தாரா நடித்து இது கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது அவர் மீண்டும் சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கு, கொம்பு வச்ச சிங்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சசிகுமார்,ஆரவ், சூரி, யோகி பாபு நடிக்கின்றர். ஹீரோயினியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது அந்த தகவலை கீர்த்தி சுரேஷ் தரப்பு மறுத்துள்ளது. விஜய்யுடன் சர்க்கார், விஷாலுடன் சண்டைக்கோழி 2 படங்களிதான் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. 

Read More about :

share