Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷ் படத்தினை கைப்பற்றிய பிரம்மாண்ட நிறுவனம்...!!

தனுஷ் படத்தினை கைப்பற்றிய பிரம்மாண்ட நிறுவனம்...!!

தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது “கொடி”. இந்த படத்தினை இயக்குகிறார் துரை செந்தில் குமார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல் மற்றும் காக்கிச் சட்டை படத்தினை இயக்கியிருக்கிறார். இந்த இரு படங்களையும் தனுஷ் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். கொடி படத்தினையும் தனுஷ் அவரது சொந்த நிறுவனம் மூலமே தயாரிக்கிறார்.

படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முழுவதும் நிறைவடைந்து விட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றது.

ஜுன் இறுதி அல்லது ஜுலை முதல் வாரத்தில் படம் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தமிழ்நாடு முழுவதும் படத்தினை வெளியிடும் உரிமையை பிரபல லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.

ஏற்கனவே தனுஷ் தயாரிப்பில் வெளியான “நானும் ரெளடிதான்” படத்தினையும் இந்நிறுவனமே வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது...

share